மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
13 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
13 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
13 hour(s) ago
தர்மபுரி மார்க்கெட்டில் 25 டன் பூக்கள் விற்பனை
01-Oct-2025
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, ஜன., 2023 முதல் டிச., வரை, 12 மாதங்களில் போக்குவரத்து துறையின் சார்பாக, தர்மபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர், பாலக்கோடு வெங்கிடுசாமி, அரூர் குலோத்துங்கன் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.இது குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தெரிவித்துள்ளதாவது:தர்மபுரி மாவட்டத்தில் கடந்தாண்டு, 25,000 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 7,130 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. காலாண்டு வரி செலுத்தாமல் இயக்குதல், தகுதிச்சான்று, காப்புச்சான்று, புகைச்சான்று புதுப்பிக்காமல் இயக்குதல், அனுமதி சீட்டு இல்லாமல் இயக்குதல் போன்ற குற்றங்களுக்காக, 676 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. மேலும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக, 233 வாகனங்கள், அதிக பாரம் ஏற்றிச்சென்ற, 92, அனுமதி சீட்டு இல்லாமல் இயக்கிய, 145, அதிவேகமாக இயக்கிய, 4,245, தகுதிச்சான்று பெறாத, 371 வாகனங்களுக்கும், புகைச்சான்று இல்லாத, 998, சிகப்பு நிற பிரதிபலிப்பான் ஒட்டாத, 585, சிவப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாத, 334 வாகனங்களுக்கும், வாகன தணிக்கையில் அபராதம் விதிக்கப்பட்டது.வாகன சோதனையின் மூலமாக, அரசுக்கு சாலை வரியாக, 1.22- கோடி ரூபாய் மற்றும் இணக்க கட்டணமாக, 83 லட்சம் என மொத்தமாக, 2.50 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. கடந்த, 2023-ம் வருடத்தில், தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக, அரசுக்கு வாகன சோதனை மூலம் மொத்தம், 3.25 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது.மேலும், தொப்பூர் மலைப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பான, 30 கி.மீ., மேல் இயக்கப்பட்ட வாகனங்களுக்கு, போக்குவரத்து துறை சார்பில் வேகத்தை கண்காணிக்கும், ஸ்பீடு ரேடார் கன் கருவி உதவியுடன் கடந்த, இரண்டரை ஆண்டுகளில், 11,960 வாகனங்களுக்கு, 86 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
01-Oct-2025