உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 3ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

3ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

தர்மபுரி:தர்மபுரி மாவட்டகலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டம் முழுவதும், ஞாயிற்றுக்கிழமையன்று(மார்ச் 3) போலியோ சொட்டு முகாம் நடக்க உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் உள்ள, 1,33,280 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. கிராம பகுதியில், 964 முகாம், நகராட்சியில், 20 முகாம் என மொத்தம், 984 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியில், அரசுத்துறையினர் மற்றும் ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என, 4,083 பேர் ஈடுபட உள்ளனர். இந்த போலியோ சொட்டு மருந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சந்தை, சினிமா தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் இம்முகாம் நடத்தப்பட உள்ளது. எனவே, தர்மபுரி மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், தங்களது, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இங்கு அழைத்து வந்து சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ