கஞ்சா விற்ற 4 பேர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அடுத்த மணியம்பாடியில் எஸ்.ஐ., நவீன் உள்ளிட்ட போலீசார் நேற்று குற்றத்தடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மணியம்பாடி பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த பெங்களூருவை சேர்ந்த, ஆரிப், 24, முகமதுசெரீப், 20, எல்லபுடையாம்பட்டியை சேர்ந்த பரத், 21, செம்மனஹள்ளியை சேர்ந்த ராகவன், 25, ஆகியோரை விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். அவர்களை போலீசார் சோதனை செய்ததில் விற்பனை செய்ய கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடத்துார் போலீசார், 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து, 1.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.