உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தேன்கனிக்கோட்டையில் 60 யானைகள் முகாம்

தேன்கனிக்கோட்டையில் 60 யானைகள் முகாம்

ஓசூர், டிச. 13-கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து, 100க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதி வந்துள்ளன. அதில் ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்கம், சானமாவு வனப்பகுதி என, 4 பிரிவுகளாக பிரிந்து முகாமிட்ட யானைகள், சுற்று வட்டார கிராமங்களில் ராகி, துவரை, அவரை, தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் பயிர்களை நாசம் செய்து வருகின்றன.தேன்கனிக்கோட்டை அருகே நொகனுார், ஆலஹள்ளி, தாவரகரை வனப்பகுதியில், 20 யானைகள் முகாமிட்டு பயிர்களை நாசம் செய்து வருகின்றன. ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த, 20 யானைகளை நேற்று முன்தினம் வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினர். அவை ஏற்கனவே பேவநத்தம் வனப்பகுதியிலிருந்த, 40 யானைகளுடன் சேர்ந்து அங்கு முகாமிட்டுள்ளன. வனப்பகுதியை ஒட்டிய பேவநத்தம், பாளேகுழி, கோட்டட்டி, புதுார், பச்சபனட்டி, பூனப்பள்ளி, கொத்தப்பள்ளி, காடுலக்கசந்திரம், கிரிசெட்டிப்பள்ளி ஆகிய கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்திய வனத்துறையினர், யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ