மேலும் செய்திகள்
சாரல் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
01-Dec-2024
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை விட்டு, விட்டு மழை பெய்து வந்தது. நேற்று காலை, 8:00 மணி வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக அரூரில், 27 மி.மீ., மழையளவு பதிவானது. மொரப்பூர், 16 மி.மீ., பாப்பிரெட்டிப்பட்டி 9.2, பாலக்கோடு 7, நல்லம்பள்ளி, 5, தர்மபுரி, 3 மி.மீ., என மாவட்டத்தில், 68.2 மி.மீ., மழையளவு பதிவானது. இந்நிலையில் தர்மபுரி, நல்லம்-பள்ளி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் காலை முதல் விட்டு, விட்டு சாரல் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக, மாவட்டத்தில் குளிர் நிலவியது.
01-Dec-2024