உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தட்டச்சு தேர்வில் 900 பேர் பங்கேற்பு

தட்டச்சு தேர்வில் 900 பேர் பங்கேற்பு

தர்மபுரி: தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், தர்மபுரி மாவட்டத்தில் நேற்று, 6 மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தட்டச்சு தேர்வு நடந்தது.இதன்படி, எஸ்.எம்., ஆறுமுகம் பாலிடெக்னிக் கல்லுாரியில், 153 பேர், தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில், 261, லட்சுமி நாராயணா கல்லுாரியில், 112, பாப்பிரெட்டிப்பட்டி குமரகுரு கல்லுாரியில், 155, பாலக்கோடு அரசு பாலிடெக்னிக்கில், 97, பைசுஹள்ளி பாலிடெக்னிக்கில், 88, தனி தேர்வர்கள் உட்பட, 900 பேர் தட்டச்சு தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முன்னேற்பாடுகளை, தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கம் செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்