மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
20 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
20 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
20 hour(s) ago
அரூர் : அரூர் பகுதியில், ஒரு கூடை தக்காளி, 2,000 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார், தீர்த்தமலை, நரிப்பள்ளி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், தக்காளி நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: அரூரில், கடந்த மாத இறுதியில், 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, 700 முதல், 800 ரூபாய் வரை விற்பனையானது. தொடர்ந்து, தக்காளி விலை படிப்படியாக அதிகரித்து, கடந்த, 10ல் ஒரு கூடை தக்காளி, 1,300 ரூபாய்க்கு விற்பனையானது. அதன்பின், கடந்த, 18ல், 1,800 ரூபாயாக அதிகரித்தது. நேற்று மீண்டும் தக்காளியின் விலை உயர்ந்து, ஒரு கூடை தக்காளி, 2,000 ரூபாய்க்கு விற்பனையானது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால், வயல்களில் உள்ள செடிகளில் தக்காளி அழுகி விட்டது. இதனால் அரூரிலுள்ள, தனியார் மண்டிகளுக்கு தக்காளி வரத்து பெருமளவு சரிந்துள்ளது. மேலும், வெளிமாவட்டங்களுக்கு தக்காளி கொண்டு செல்லப்படுவதும் விலை உயர்வுக்கு காரணம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago