உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காட்சி பொருளான குடிநீர் தொட்டி அரசு நிதி வீணடிப்பு; மக்கள் புகார்

காட்சி பொருளான குடிநீர் தொட்டி அரசு நிதி வீணடிப்பு; மக்கள் புகார்

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் ஒன்றியம், தாளநத்தம் ஊராட்சியில் அய்யம்பட்டி, குண்டல்பட்டி, நொச்சிக்குட்டை, தாளநத்தம், காவேரிபுரம் உள்ளிட்ட கிராமங்களில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில், அய்யம்பட்டி, 4 ரோடு பகுதியில், 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த 2020- -21ம் ஆண்டில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இது கட்டப்பட்டதிலிருந்து, இதுவரை குடிநீரோ, ஒகேனக்கல் குடிநீரோ ஏற்றப்படவில்லை. இதனால் கடந்த, 4 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் குடிநீரின்றி கடும் அவதி அடைந்து வருகின்றனர். கிணற்று பகுதியில் இருந்தும், ஒரு கி.மீ., தொலைவும் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். தண்ணீர் ஏற்ற பலமுறை பொதுமக்கள் பஞ்., நிர்வாகத்திடம் கேட்டும் முறையான நடவடிக்கை இல்லை. இதனால் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டும் குடிநீரின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு நிதி வீணடிப்பு செய்யப்பட்டு, வெறும் காட்சி பொருளாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது என புகார் தெரிவிக்கும் மக்கள், இதில் ஒகேனக்கல் குடிநீர் ஏற்றி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை