| ADDED : ஜூலை 13, 2024 08:14 AM
தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள, சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நட-ராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த, 10- ல் தொடங்கியது. முக்கிய நாளான நேற்று காலை, சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் மூலவருக்கு மஹா அபிஷேகம் நடந்தது. இதில், 108 சங்காபிஷேகம், கலசபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி சேவை நடந்தது. பின்னர், கோவில் பந்தலில் ஆனந்த நடராஜருக்கு மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான, 2 டன் பழங்-களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும் பால், தயிர், சந்-தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் மஹா அபி-ஷேகம் மற்றும் ஆராதனையும், பின்னர் தங்கக்கவச அலங்கா-ரத்தில் ஆனித் திருமஞ்சன தரிசனத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு திருஆபரண அலங்கார காட்சியுடன், அம்மையப்பன் திருநடன திருவீதி உலா மற்றும் கோபுர தரிசனம் நடந்தது.அதேபோல் நல்லம்பள்ளி அடுத்த, கீழ் பூரிக்கலில் உள்ள சிவ-காமி உடனமர் ஆனந்த நடராஜருக்கு ஆனி திருமஞ்சன பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.