உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

அரூர், அரூர் தாலுகா அலுவலகம் முன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், காத்திருப்பு போராட்டம் நடந்தது. வட்ட தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். மா.கம்யூ., மாவட்ட செயலாளர் சிசுபாலன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம், மாநில செயலாளர் முத்து, மாநில துணைத்தலைவர் கணபதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். போராட்டத்தில், அரூர் தாலுகாவில், 2023 அக்., 3 முதல், 2025 நவம்பர், 10 வரை மனைபட்டா கேட்டு, தலித், அருந்ததியர், பழங்குடியினர், போயர் இன மக்கள் தாலுகா அலுவலகத்தில் அளித்த மனுக்கள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கீழானுாரில் நிலத்தை வகை மாற்றம் செய்து, ஆதிதிராவிடர், கொத்தனாம்பட்டி பழங்குடியினர் இன மக்களுக்கு மனைபட்டா வழங்க வேண்டும். எச்.ஈச்சம்பாடியில் வீடு கட்டி குடியிருந்து வரும் தொம்பர் இன மக்களுக்கு மனை பட்டா வழங்க வேண்டும். சிட்லிங் பஞ்.,, கத்திரிப்பட்டி, நாட்டான் வளவு, கம்பாலை ஆகிய கிராமங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் மலைவாழ் மக்களுக்கு மனைப்பட்டா, நிலப்பட்டா வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை