உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பட்டியல் இன சிறுவன் மீது தாக்குதல்: மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

பட்டியல் இன சிறுவன் மீது தாக்குதல்: மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகில் பட்டியல் இன சிறுவனை கட்டி வைத்து சாதி பெயரை சொல்லி தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து மா.கம்யூ., கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் தனுஷன் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் ஆனந்தன், மாநில முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசினார். நிர்வாகிகள் சேகர், குமார், தீர்த்தகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ