உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளியில் விழிப்புணர்வு

பள்ளியில் விழிப்புணர்வு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ராமியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், கோபிநாதம்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் இளம்வயது திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பெண் குழந்தைகள் பாலியல் சீண்டல்களில் இருந்து தற்காத்துக் கொள்வது, போக்சோ சட்டத்தின் விதிமுறைகள், இளம்வயதில் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் விளைவுகள், சமூக வலைத்தளங்களை மாணவ, மாணவியர் எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது, குற்ற செயல்களில் ஈடுபட துாண்டுவது உள்ளிட்ட தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் எஸ்.ஐ., கலையரசன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை