அரூரில் புத்தக கண்காட்சி
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில், பொதுநுாலகத் துறை, அரூர் முழுநேர கிளை நுாலகம் மற்றும் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், அரூர் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி திறப்பு விழா நேற்று நடந்தது. தொழிலதிபர் ராஜேந்திரன் புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். விழாவில், வாசகர் வட்ட தலைவர் முருகன் தலைமை வகித்து விற்பனையை துவக்கி வைத்தார். இதில், ஓய்வு பெற்ற ஆசிரியர் சின்னக்கண்ணன், நுாலகர்கள் தீர்த்தகிரி, தும்பாராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.