| ADDED : நவ 28, 2025 01:34 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், திப்பம்பட்டி அடுத்த வன்னியகுளத்தை சேர்ந்தவர் தனசேகரன், 40. இவர், சோழமண்டல பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். தனசேகரின் தாய் அமரா, தோட்டத்தில் நர்சரி கார்டன் வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த, 24ல் காலை, 11:00 மணிக்கு அமரா, தர்மபுரிக்கு சென்று விட்டு, மதியம், 3:00 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டும், உள்ளே பீரோவை உடைக்க முயற்சி செய்ததும் தெரிந்தது. ஆனால் வீட்டில் பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை. தனசேகர் புகார் படி கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் காரிமங்கலம் தாலுகா தேவரெட்டியூரை சேர்ந்த விஜய், 29, என்பவரை கைது செய்தனர்.அவர் மீது கடந்த, 2023ல் கோவையில் பிரபல நகைக்கடையில், 6 கிலோ தங்கம் மாயமான வழக்கு மற்றும் கடந்த சில மாதங்களுக்கு முன், தர்மபுரியில் ஒரு வீட்டில், 50 பவுன் திருடு போன வழக்கு ஆகிய, 2 வழக்குகளில் முதல் குற்றவாளியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.