உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 9 பேர் மீது வழக்கு

அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 9 பேர் மீது வழக்கு

தர்மபுரி, நவ. 2-தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் பட்டாசு வெடிக்க அரசு நேரம் ஒதுக்கியிருந்தது. அதன்படி, காலை, 6:00 மணி முதல், 7:00 மணி வரையும் மாலை, 7:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரையும் ஒதுக்கப்பட்டது. அதை மீறி தர்மபுரி மாவட்டத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், தர்மபுரி பஸ்ஸ்டாண்டு, ஆறுமுகம் தெரு, முகமதலி கிளப்ரோடு, நான்கு ரோடு ஆகிய பகுதிகளில் நான்கு பேரும், தொப்பூர் அடுத்த பாளையம்புதுாரில் அதிக சத்தத்துடன் பட்டாசு வெடித்த ஒருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு அறிவித்த நேரம் மீறி பட்டாசு வெடித்ததாக ஒன்பது பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை