மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவி மாயம்
29-Dec-2025
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், வே.முத்தம்பட்டியை சேர்ந்த குமாரசாமி, 21. இவர் தர்மபுரி அரசு கலைக்கல்-லுாரி இயற்பியல் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். என்.சி.சி., மாணவரான இவர் இந்திய ராணுவத்தில், 'அக்னிபாத்' ராணுவ வீர-ராக தேர்வு செய்யப்பட்டார். கல்லுாரி முதல்வர் கண்ணன், மாணவன் குமாரசாமிக்கு ராணு-வத்தில் சேருவதற்கான பணி நியமன ஆணையை வழங்கினார். இதில், இயற்பியல் துறை தலைவர் கலைச்செல்வி, தமிழ்நாடு, 12 பட்டாலியன் ஜெய்மன்ஜோஸ், தேசிய மாணவர் படை அலுவலர் லெப்டினன்ட் தீர்த்தகிரி மற்றும் என்.சி.சி., மாணவர்கள், குமாரசாமிக்கு வாழ்த்து தெரிவித்து, வழி அனுப்பி வைத்தனர்.
29-Dec-2025