உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர் நகராட்சிக்கு கமிஷ்னர் பொறுப்பேற்பு

அரூர் நகராட்சிக்கு கமிஷ்னர் பொறுப்பேற்பு

அரூர், தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு, ஜூலையில் ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தை பாளையம்புதுாரில், நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அப்போது, மோப்பிரிப்பட்டி, தொட்டம்பட்டியை பஞ்சாயத்துக்களை இணைத்து, அரூர் டவுன் பஞ்., அரூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். தொடர்ந்து, கடந்த ஆக., 25ல், அரூர் டவுன் பஞ்.,ஐ நகராட்சியாக தரம் உயர்த்தி, தமிழக அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் அரூர் நகராட்சி கமிஷ்னராக சேகர் (பொறுப்பு) நேற்று பொறுப்பேற்றார். இவர், தர்மபுரி நகராட்சி கமிஷ்னராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. நகராட்சியின் முதல் கமிஷ்னரான சேகருக்கு, அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை