உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பறிமுதல் செய்த ரூ.70,800 உரியவரிடம் ஒப்படைப்பு

பறிமுதல் செய்த ரூ.70,800 உரியவரிடம் ஒப்படைப்பு

பாப்பிரெட்டிப்பட்டி : பொம்மிடி ஆர்.எம்.நகர், ரோட்டிலுள்ள சோதனைச்சாவடியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் மகேஸ்வரி தலைமையில் கடந்த, 21ல் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வந்த, சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி நாச்சினாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆட்டு வியாபாரி ரஜினி, 42, என்பவரின் பைக்கை சோதனை செய்ததில், அவர் உரிய ஆவணமின்றி, 70,800 ரூபாய் எடுத்து சென்றதை பறிமுதல் செய்தனர்.உடனடியாக ரஜினி, மாவட்ட தேர்தல் அலுவலரால் நியமிக்கப்பட்ட குழுவிடம், மனு அளித்தார். அதன் மீது விசாரணை செய்த குழுவினர், பறிமுதல் செய்த பணத்தை திரும்ப உரிமையாளரிடம் ஒப்படைக்கலாம் என்ற உத்தரவுப்படி, நேற்று உதவி தேர்தல் அலுவலர் செர்லிஏஞ்சலா, சார் கருவூலத்தில் இருந்த எடுத்து, 70,800 ரூபாயை, ஆடு வியாபாரி ரஜினியிடம் வழங்கினார். அப்போது, தாசில்தார்கள் சரவணன், பெருமாள், தேர்தல் துணை தாசில்தார் சிவஞானம் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை