உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஊரின் பெயரை மாற்ற கருத்து கேட்பு கூட்டம்

ஊரின் பெயரை மாற்ற கருத்து கேட்பு கூட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், 19 ஊராட்சிகள் உள்ளன. இதல், 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள், 1,000க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில் சில கிராமங்கள், பல தெருக்கள் ஜாதி பெயர்களில் அமைந்துள்ளன. இதை பெயர் மாற்றம் செய்ய, அரசு மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறது. அதன்படி கடந்த, ஒரு மாதமாக பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்து வருகிறது. நேற்று இருளப்பட்டி ஊராட்சியில் துணை பி.டி.ஓ., வேடியப்பன் தலைமையில், மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் இருளப்பட்டி இந்திரா நகர், பீரங்கி நகர், நாகலுார், காமராஜர் நகர், தாமரை நகர், ஆகிய கிராமங்களில் இருந்து மக்கள் கலந்து கொண்டனர். பெயர் மாற்றுவது குறித்து மக்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. ஆனால் இருளப்பட்டி எனும் பெயர் மாற்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், 200 ஆண்டுகளுக்காக இருந்து வரும் பெயரை மாற்றக்கூடாது என அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை