மேலும் செய்திகள்
நுகர்வோரே ராஜா; உரிமைகள் ஏராளம்
18-Oct-2025
தர்மபுரி ;மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து, இளம் நுகர்வோர்களுக்கான புத்தாக்க பயிற்சியை, மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று துவக்கி வைத்தார்.தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து, மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு இளம் நுகர்வோர்களுக்கான புத்தாக்க பயிற்சியை கலெக்டர் சதீஸ் நேற்று தொடங்கி வைத்தார். இதில், டி.ஆர்.ஓ., கவிதா, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக மேலாளர் தணிகாசலம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கதிரேசன், உணவு பாதுகாப்புத்துறை, மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ்குமார், உறுதிமொழி ஆணையர் முரளி உட்பட, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
18-Oct-2025