உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புரட்டாசியில் சிறப்பு வழிபாடு பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசியில் சிறப்பு வழிபாடு பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

தர்மபுரிபுரட்டாசி மாத, 3வது சனிக்கிழமையையொட்டி, பெருமாள் கோவில்களில், திரளான பக்தர் கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தெய்வ வழிபாட்டுக்கு உகந்த மாதங்களில் ஒன்றான புரட்டாசி மாதத்தில், பக்தர்கள் விரதமிருந்து பெருமாளை வழிபடுவது வழக்கம். புரட்டாசி சனிக்கிழமைகளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக, வழிபாடுகள்நடக்கும். நேற்று புரட்டாசி மாத, 3வது சனிக்கிழமையொட்டி, பழைய தர்மபுரி அடுத்த, வரதகுப்பம் வெங்கட்ரமண சுவாமி, கிருஷ்ணாபுரம் லட்சுமி நாராயண சுவாமி, மூக்கனுார்ஆதிகேசவ பெருமாள், புலிக்கரை சீனிவாச பெருமாள், அதிய-மான்கோட்டை சென்றாய பெருமாள், லளிகம் சென்றாய பெருமாள், செட்டிகரைஸ்ரீபெருமாள் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பெருமாள் கோவில்களில் நேற்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க-ளுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.* அரூர் பழையபேட்டை கரியபெருமாள் கோவிலில், ஏராள-மான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அதேபோல், மொரப்பூர் சென்னகேசவ மற்றும் வரதராஜ பெருமாள் கோவில், எம்.வெளாம்பட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ட ரமண பெருமாள் கோவில் மற்றும் மருதிப்பட்டி, பெத்துார், கொங்க-வேம்பு உள்ளிட்ட இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில், நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அரூரில் பூ மாலைகளின் விலை அதிகரித்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. அரூர் கடைவீதியில், பூக்கள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்க, மக்கள் குவிந்ததால், அதன் விற்பனை ஜோராக நடந்தது.* பாப்பம்பாடியிலுள்ள வெங்கட்ரமண பெருமாள் சுவாமி, கடத்துார் அடுத்த மணியம்பாடி வெங்கட்ரமணா சுவாமி, தென்க-ரைக்கோட்டை கல்யாண ராமர் கோவிலில் கல்யாண ராமர் சீதை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.* பாப்பாரப்பட்டி அருகே, மலையூரிலுள்ள பழமையான கோபால் சுவாமி கோவிலில், கோபால் சுவாமி துளசியம்மாள், லட்சுமி திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது. முன்னதாக மூலவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. திருக்கல்யாண வைபவத்தையொட்டி, சுற்று வட்டார பகுதிகளிலி-ருந்து திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜா, பென்னாகரம் தாசில்தார் லட்சுமி, ஆர்.ஐ., சுஜாதா, ஆய்வாளர்கள் சங்கர் கணேஷ், மணி-கண்டன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ