மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
20 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
20 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
20 hour(s) ago
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் பச்சியம்மன் கோவில் திருவிழா நடந்தது. காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி பச்சியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் விழா துவங்கியது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு பெண்கள் மாவிளக்குடன் ஊர்வலமாக சென்றனர். 3 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ., அன்பழகன் துவக்கி வைத்தார். இரவில் வாணவேடிக்கையும், கலை நிகழ்ச்சியும் நடந்தது. ஏற்பாடுகளை ஊர் கவுண்டர்கள் மற்றும் விழா குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago