| ADDED : செப் 12, 2011 02:21 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தமிழக அரசு உத்தரவுப்படி நேற்று இரு
கோவில்களில் புதியதாக அன்னதான திட்டம் துவக்கப்பட்டது.தமிழக அரசு
உத்தரவுப்படி, தமிழத்தில் புதியதாக 106 கோவில்களில் அன்னதான திட்டம்
விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இந்து அறநிலையத் துறை
கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அதியாமான்கோட்டையடுத்த காலபைரவர் கோவிலில்
நேற்று அன்னதான திட்டத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் துவக்கி
வைத்து ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்கினார்.நிகழ்ச்சியில், அன்னதானம்
வழங்க நன்கொடையாக தர்மபுரி பாரத் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் வைத்தியலிங்கம்,
15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். தொடர்ந்து, பலர்
அன்னதானத்துக்காக காசோலைகள் வழங்கினர்.கலெக்டர் லில்லி, டி.ஆர்.ஓ., கணேஷ்,
எம்.எல்.ஏ., அன்பழகன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமேஷ் உள்பட
பலர் கலந்துகொண்டனர்.*பென்னாகரம் அடுத்த நெருப்பூர் அருள்மிகு
முத்திராயஸ்வாமி கோவிலிலும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை பென்னாகரம்
எம்.எல்.ஏ., நஞ்சப்பன் துவக்கிவைத்தார்.