உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரி சிலவரி செய்திகள்

தர்மபுரி சிலவரி செய்திகள்

புகையிலை விற்ற கடைக்குரூ.25,000 அபராதம் விதிப்புகம்பைநல்லுார்: மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், கம்பைநல்லுார் எஸ்.ஐ., முருகன் உள்ளிட்ட குழுவினர் கம்பைநல்லுார், இருமத்துார் பகுதியில் உள்ள மளிகை கடையில், நேற்று ஆய்வு மேற்கொண்டனர், அப்போது, தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து உரிமையாளருக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், கடைக்கு சீல் வைக்கப்பட்டது. பள்ளி மாணவி மாயம்தர்மபுரி: தர்மபுரி பகுதியை சேர்ந்த, 17, வயது சிறுமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த, 25 முதல் அவரை காணவில்லை. இது குறித்து, பெற்றோர் அளித்த புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.ரூ.28 லட்சத்துக்குஆடுகள் விற்பனைகம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் வாரச்சந்தைக்கு நேற்று, 340க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும், விற்பனைக்கு கொண்டு வந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 6,800 முதல், 7,300 ரூபாய் வரை விற்பனையானது. சந்தையில், 28 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.மா.கம்யூனிஸ்ட் கட்சிஅரசியல் பயிற்சி முகாம்பென்னாகரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அரசியல் பயிற்சி முகாம் நேற்று, ஒகேனக்கல்லில் தொடங்கியது.மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்சுணன் தலைமை வகித்தார். மூத்த தலைவர் இளம்பரிதி தொடங்கி வைத்தார். வகுப்பு வாதம் என்னும் தலைப்பில் அன்வர் உசேன் பேசினார். இந்நிகழ்சியில் மாவட்ட செயலாளர் குமார், மாநிலக்குழு உறுப்பினர் சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கிணற்றில் விழுந்தபுள்ளி மான் மீட்புபாலக்கோடு: பாலக்கோடு அருகே, விவசாய கிணற்றில் விழுந்த புள்ளிமானை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள, 5 வது மைல்கல் கிராமத்தில் நேற்று அதிகாலை, 3 வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தது. இதில், குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தவறி விழுந்து, தண்ணீரில் தத்தளித்தது. இது குறித்து, உடனடியாக பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்த புள்ளிமானை கயிறு கட்டி உயிருடன் மீட்டு, பாலக்கோடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறை அதிகாரிகள், மானை பிக்கிலி காப்புக்காட்டில் உள்ள அடர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.நலத்திட்ட உதவிகள் வழங்கல்அரூர்: அரூர் தாலுகா அலுவலகத்தில், கடந்த, 25ல் துவங்கிய ஜமாபந்தி நேற்று நிறைவடைந்தது. இதில், அரூர், மொரப்பூர் மற்றும் தீர்த்தமலை வருவாய் உள் வட்டத்திற்கு உட்பட்ட, கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனைப்பட்டா, நில அளவை செய்தல், புதிய ரேஷன் கார்டு, முதியோர் உதவி தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக, 1,395 மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரும், அரூர்ஆர்.டி.ஓ.,வுமான வில்சன் ராஜசேகரிடம் அளித்தனர்.இவற்றில், பட்டா மாற்றம், இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட, 42 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, நேற்று தாலுகா அலுவலகத்தில் நடந்த விழாவில், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தாசில்தார் ராதாகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் பழனி மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.மதுபாட்டில்களை விற்ற5 பேர் அதிரடி கைதுதர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை எஸ்.ஐ., மோகன் ரோந்து சென்றார். அப்போது, தின்னுார் பகுதியை சேர்ந்த தங்கராஜ், 42, என்பவர் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, 63 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.தொப்பூர் சுற்றுவட்டார பகுதியில் எஸ்.ஐ., நெடுஞ்செழியன் ரோந்து சென்றார். அப்போது, பாளையம்புதுாரை சேர்ந்த விஜயகுமார், 40, என்பவர் மது பாட்டில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, 35 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல், ஜருகு பகுதியில் முருகன், 55, என்பவரை கைது செய்து, 35 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.பாப்பாரப்பட்டி அடுத்த, பிக்கிலி பகுதியில் மது பாட்டில் விற்பனை செய்த சிவம், 40; என்பவரை கைது செய்து, 29 பாட்டில்களை பாப்பாரப்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். இண்டூர் அடுத்த, நாகர்கூடல் பகுதியில் மது பாட்டில் விற்பனை செய்த முருகேசன், 80; என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த, 27 மது பாட்டில்களை இண்டூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை