உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பள்ளியில் நேர்பட பேசு மாணவர்களுடன் கலந்துரையாடல்

அரசு பள்ளியில் நேர்பட பேசு மாணவர்களுடன் கலந்துரையாடல்

மொரப்பூர், தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த சந்தப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், 'நேர்பட பேசு' நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் இளங்கோ தலைமை வகித்தார். மாணவி சஞ்சனா வரவேற்றார். 'மருந்தென வேண்டாவாம்' என்ற தலைப்பில், மருத்துவர் கோவிந்தராசு பேசியதாவது:நாம் இந்த மண்ணையும், பெண்ணையும் மதித்து பாதுகாக்க வேண்டும். காலை உணவு கட்டாயம் சாப்பிட வேண்டும். அது சரிவிகித உணவாக இருக்க வேண்டும். இனிப்புக்கு வெள்ளை சர்க்கரை தவிர்த்து, பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும். சிறுநீர் மஞ்சள் நிறமாக இருந்தால் தேவையான தண்ணீரை உடலுக்கு அளிக்கவில்லை என அர்த்தம். சிறுநீரின் நிறத்தை வைத்தே நாம் தண்ணீர் குடிப்பதை அறிந்து கொள்ளலாம். தண்ணீரை கொதிக்க வைத்து ஆறிய பின் பயன்படுத்த வேண்டும். தன் சுத்தம் அவசியம். நாம் தோலை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். நாள் ஒன்றுக்கு, 15,000 முதல், 20,000 முறை கண் சிமிட்டுதல் அவசியம். நாம் ஆரோக்கியமாக வாழ போதை பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். தைரியம், சுத்தம், நேர்மை ஆகியவற்றை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். உங்கள் கனவு என்னவானாலும், அது ஆரோக்கியமானதாக நேர்மையானதாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர் வேடியப்பன், ஆசிரியர் தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை