உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாவட்ட ஜூனியர், சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டிகள்

மாவட்ட ஜூனியர், சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டிகள்

தர்மபுரி, தர்மபுரி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஜூனியர், சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டிகள் தர்மபுரி அருகே, குண்டலப்பட்டியில் உள்ள பச்சமுத்து கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஜூனியர் பிரிவில், 60 ஆண்கள் அணிகளும், 15 பெண்கள் அணிகள், சப்-ஜூனியர் பிரிவில், 20 ஆண்கள், 10 பெண்கள் அணியும் மொத்தம், 105 அணிகளில், ஆண்கள், பெண்கள், மாணவ- மாணவியர் என, 800 பேர் கலந்து கொண்டனர்.போட்டிகளை, தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநில துணை தலைவரும், தர்மபுரி மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவருமான பாஸ்கர் தொடங்கி வைத்தார். மாவட்ட அளவில் நடந்த இந்த ஜூனியர், சப்-ஜூனியர் பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறப்பாக விளையாடிய வீரர் மற்றும் வீராங்கனைகள், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில், விரைவில் நடக்கவுள்ள தமிழ்நாடு சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து, மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ