மேலும் செய்திகள்
ரூ.2.50 லட்சத்துக்கு அரூரில் பருத்தி ஏலம்
23 hour(s) ago
ரயில் மோதி இன்ஜினியர் பலி
23-Dec-2025
பென்னாகரம் தொகுதியில் பள்ளி கட்டடங்கள் திறப்பு
23-Dec-2025
பள்ளியில் ஆய்வக கட்டட பணி
22-Dec-2025
தர்மபுரி : தர்மபுரி லோக்சபா தொகுதியில், தி.மு.க.,வில் மணி, அ.தி.மு.க.,வில் அசோகன், பா.ம.க.,வில் சவுமியா, நா.த.க., சார்பாக அபிநயா உட்பட, மாவட்டத்தில், 24 பேர் போட்டியிட்டனர். கடந்த ஏப்., 19ல் ஓட்டுப்பதிவு நடந்தது. தர்மபுரி லோக்சபா தொகுதியிலுள்ள மொத்தம், 6 சட்டசபை தொகுதிகளை சேர்ந்த, 15,24,896 பேரில், 12,38,183 பேர் ஓட்டளித்திருந்தனர். நேற்று ஓட்டு எண்ணிக்கையையொட்டி, 10,474 தபால் ஓட்டுகள் காலை, 8:00 மணிக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் சாந்தி, தேர்தல் பார்வையாளர்கள் அருணாரஜோரியா, ஸ்ரீஹர்ஷா செட்டி மற்றும் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டன. தொடர்ந்து, 6 சட்டசபை தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.இதில், தி.மு.க.. வேட்பாளர் மணி, 4,32,667 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். பா.ம.க., வேட்பாளர் சவுமியா, 4,11,367 ஓட்டுகள் பெற்று, 2ம் இடம் பிடித்தார். அ.தி.மு.க., வேட்பாளர் அசோகன், 2,93,629 ஓட்டுக்களுடன் 3ம் இடம் பிடித்தார். நா.த.க., வேட்பாளர் அபிநயா, 65,381 ஓட்டுகளுடன், 4ம் இடம் பிடித்தார். நோட்டாவுக்கு, 9,187 ஓட்டுகள் பதிவானது. இதை விட பி.எஸ்.பி., வேட்பாளர் மற்றும், 19 சுயேச்சை வேட்பாளர்கள் குறைவான ஓட்டுக்களை பெற்றனர்.
23 hour(s) ago
23-Dec-2025
23-Dec-2025
22-Dec-2025