மேலும் செய்திகள்
அலுமினிய ஒயர் திருட்டு
06-May-2025
தொப்பூர் தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே மேல்ஈசல்பட்டியிலுள்ள விவசாய தோட்டத்தில், விவசாயி மல்லையன் வசிக்கிறார். அவர் தன் பாதுகாப்புக்காக டாபர்மேன் மற்றும் சிப்பிப்பாறை வகை நாய்களை வளர்த்து வருகிறார். பகலில் கட்டப்பட்டிருக்கும் நாய்கள், இரவில் கழட்டி விடப்படுவது வழக்கம்கடந்த, 24ல் இரவு, 8:30 மணிக்கு சாப்பாடு வைக்க விஜயகுமாரின் தந்தை மல்லையன், நாய்களை கூப்பிட்ட போது, சிப்பிபாறை நாய் மட்டும் வந்து சாப்பிட்டுள்ளது. டாபர்மேன் நாய் வரவில்லை. அப்போது, வீட்டின் அருகே வெடிச் சத்தம் கேட்டுள்ளது. மல்லையன் சென்று பார்த்தபோது, நாயின் கீழ்தாடை கிழிந்து படுகாயத்துடன் இறந்து கிடந்தது.நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு நிலத்தை சுற்றி பார்த்தபோது, வெடி வெடித்த இடத்தில், ரத்தக்கறையும், நாட்டு வெடிகுண்டு வெடித்தது போலும் இருந்துள்ளது. மல்லையன் மகன் விஜயகுமார், 43, புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
06-May-2025