மேலும் செய்திகள்
தி.மு.க.,வில் ஐக்கியமான பா.ம.க., - த.வெ.க., நிர்வாகிகள்
11 hour(s) ago
முனியப்பன் கோவில் திருவிழா
11 hour(s) ago
போதை பொருள் தடுப்பு பிரிவில் மோப்ப நாய் அதிபன் சேர்ப்பு
11 hour(s) ago
மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
30-Dec-2025
திருப்பூர்: திருப்பூர் தொகுதியில், மூத்த, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 2,884 பேர், வீட்டிலிருந்த படியே ஓட்டளிக்கின்றனர். இவர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு, இன்றும் நாளையும் நடைபெறுகிறது.லோக்சபா தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவு இலக்கை எட்டுவதற்காக, தேர்தல் கமிஷன் தொடர்ந்து பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே ஓட்டளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் லோக்சபா தொகுதியில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பெருந்துறை, அந்தியூர், பவானி, கோபி சட்டசபை தொகுதிகள் உள்ளன. மூத்த மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம், வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டு பதிவு செய்வதற்கான விருப்பம் தெரிவிக்கும் 12டி படிவம் பூர்த்தி செய்து பெறப்பட்டது.வீட்டிலிருந்தபடியே ஓட்டளிக்க தகுதியான வாக்காளர்களுக்கு, தபால் ஓட்டு சீட்டு தயார் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர் 2,288 பேர்; 596 மாற்றுத்திறனாளிகள் என, மொத்தம் 2884 வாக்காளர்கள் வீட்டி லிருந்தபடியே ஓட்டுப் பதிவு செய்ய தகுதியானோராக உள்ளனர்.இவர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு, இன்று துவங்குகிறது. தபால் ஓட்டுப்பதிவுக்கான ஓட்டுச்சீட்டுக்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்திறங்கின. அவை, தொகுதிவாரியாக பிரிக்கப்பட்டு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.ஓட்டுப்பதிவு அலுவலர்கள் குழுவினர், போலீஸ் பாதுகாப்புடன், வீடுதேடிச்சென்று, வாக்காளர்களிடம் தபால் ஓட்டு பதிவு செய்து பெறுவர்.தபால் ஓட்டு பெறுவதற்காக செல்லும் அலுவலர்கள் குழுவினருடன், மைக்ரோ அப்சர்வர், வேட்பாளர்களின் முகவர்களும் உடன் செல்வர்.தபால் ஓட்டுப்பதிவு, இன்றும், நாளையும் நடைபெறும். குழுவினர் வரும்போது வீட்டில் வாக்காளர் இல்லையெனில், இரண்டாவது முறை மீண்டும் வந்து, ஓட்டுப்பதிவு செய்வர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
30-Dec-2025