புகையிலை பொருட்கள் கடத்திய டிரைவர் கைது
தொப்பூர்: தொப்பூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., பிரபாகரன் தலைமையி-லான போலீசார் நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு தொப்பூர் செக்போஸ்ட் அருகே, போலீஸ் கோட்ரஸ் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்-களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சேலம் நோக்கி வந்த கர்நாடக பதிவெண் கொண்ட ஈச்சர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 24 கிலோ எடை கொண்ட, 13,200 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கடத்தியது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து, டிரைவரான கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார், எடையூரை சேர்ந்த வேடியப்பன், 22, என்பவரை கைது செய்தனர்.