உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரியில் 146 மாணவர்களுக்கு ரூ.7.27 கோடி கல்வி கடன் வழங்கல்

தர்மபுரியில் 146 மாணவர்களுக்கு ரூ.7.27 கோடி கல்வி கடன் வழங்கல்

தர்மபுரி, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து, நேற்று நடத்திய மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாமில், மாவட்ட கலெக்டர் சதீஸ், தர்மபுரி தி.மு.க., எம்.பி., மணி முன்னிலையில், 146 மாணவ, மாணவியர்க்கு, 7.27 கோடி ரூபாய் கல்விக்கடன் உதவிகளை வழங்கினார்.தர்மபுரி மாவட்டத்தில் நவ., 27 வரை, 1,128 மாணவர்களுக்கு கல்வி கடனாக, 22.28 கோடி ரூபாய் வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மேலும், 1,500 மாணவர்களுக்கு, 40 கோடி ரூபாய் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக, கலெக்டர் சதீஸ் தெரிவித்தார்.தர்மபுரி பா.ம.க., -எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கோவிந்தராஜூ, மாவட்ட இந்தியன் வங்கி மேலாளர் ராமஜெயம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சுப்பையா பாண்டியன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை