உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / முன்னாள் ராணுவத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

முன்னாள் ராணுவத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

போச்சம்பள்ளி, ராணுவத்தினரை இழிவாக பேசிய, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூவை கண்டித்து, போச்சம்பள்ளி தாலுகா அலுவலகம் முன், முன்னாள் ராணுவத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டி அதில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், மதுரை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர், 2026 தேர்தலில் செல்லுார் ராஜூ போட்டியிட்டால் அவரை தோல்வியடைய செய்வோம் என, கோஷம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாரூர், மத்துார், போச்சம்பள்ளி பகுதிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி