உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / போலி டாக்டர் கைது

போலி டாக்டர் கைது

தர்மபுரி: அதியமான்கோட்டையில், பிளஸ் 2 மட்டும் படித்து விட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சைய-ளித்த போலி டாக்டரை, போலீசார் கைது செய்-தனர்.தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை திர-வுபதி அம்மன் கோவில் குடியிருப்பு வீதியிலுள்ள ஓட்டு வீட்டில், அதே பகுதியை சேர்ந்த கணேசன், 54, என்பவர் கிளினிக் நடத்தி வந்துள்ளார். இவர், பிளஸ் 2 படித்துவிட்டு, மருத்துவம் படிக்-காமலேயே ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது. அதன்படி, மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி தலை-மையிலான போலி மருத்துவர்கள் ஒழிப்பு குழு-வினர் மற்றும் அதியமான்கோட்டை இன்ஸ்-பெக்டர் புவனேஸ்வரி ஆகியோர், நேற்று கிளி-னிக்கில் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, கணேசன் படிப்பு சான்றிதழை ஆய்வு செய்ததில், அவர், பிளஸ் 2 மட்டும் படித்து விட்டு, நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது. இதைய-டுத்து அவரை கைது செய்த போலீசார், அங்கி-ருந்த மருந்து, மாத்திரைகள், குளுக்கோஸ், ஊசிகள் மற்றும் சிரஞ்சிகளை பறிமுதல் செய்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை