உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மயில்களை கட்டுப்படுத்த குள்ள நரிகளை கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்தல்

மயில்களை கட்டுப்படுத்த குள்ள நரிகளை கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்தல்

தர்மபுரி: விவசாய பயிர்களை சேதப்படுத்தும் மயில்களை கட்டுப்படுத்த, குள்ள நரிகளை மற்ற மாவட்டங்களில் இருந்து கொண்டு வர வேண்டும் என, குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் வலியுறுத்தினர். தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது. இதில் விவசாயிகள் பேசுகையில், 'தர்மபுரி மாவட்டத்தில், 2022ல் மினி டிராக்டர் வாங்க பதிவு செய்த விவசாயிகளுக்கு வழங்க, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவ-சாய நிலங்களில், மயில், காட்டு பன்றி போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் மயில்கள் இனப்பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், அவை விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதற்கு குள்ள நரிகள் அழிந்தது தான் முக்கிய காரணம். எனவே, வனத்துறை மூலம், மற்ற மாவட்டங்களில் இருந்து குள்ள நரி-களை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவை மயில் முட்டைகளை அழித்து, அவற்றின் இனப்பெருகத்தை கட்டுப்படுத்தும்.வாணியாறு அணையின், பழைய ஆயக்கட்டு கால்வாய்களில் கடைமடைக்கு தண்ணீர் வருவதில்லை. இதனை சீரமைக்க, நட-வடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பேசினர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'வன விலங்குகளால் பயிர்க-ளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து, விவசாயிகள் பலர் முறையாக புகார் அளிப்பதில்லை. நடப்பாண்டில், வன விலங்குகளால் ஏற்-பட்ட பாதிப்புகளுக்கு புகார் அடிப்படையில், 23 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், குள்ளநரிகள் கொண்டு வருவதற்கான சாத்திய கூறுகள் இல்லை,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை