உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சத்துணவு பணியாளர்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி

சத்துணவு பணியாளர்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி

பாப்பிரெட்டிப்பட்டி; பாப்பிரெட்டிப்பட்டி பி.டி.ஓ., அலுவலகத்தில் சத்துணவு பணியாளர்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.சிறப்பு நிலைய அலுவலர் செந்தில் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு குறித்து விளக்கினர். வீடு மற்றும் பணியிடங்களில் உணவு சமைக்கும் போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்படும் பட்சத்தில், பதற்றமடைய கூடாது, அருகிலுள்ள பொருட்களில் தீ பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள், தீயை அணைத்தல், தீ தடுப்பு உபகரணங்களை பயன்படுத்துதல், சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டால் கையாளும் விதம் குறித்து விளக்கினர். தொடர்ந்து, செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சத்துணவு பணியாளர்கள், தீயணைப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ