உணவு பாதுகாப்பு துறை சோதனை 5 கடைகளுக்கு ரூ.5,000 அபராதம்
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மளிகை, பீடா கடைகள், ஓட்டல் உள்ளிட்டவற்றில், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் உள்ளிட்ட அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத, 5 கடைகளுக்கு, 1,000 ரூபாய் வீதம், 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தினர்.