இலவச மருத்துவ முகாம்
அரூர்: அரூர் அடுத்த பொய்யப்பட்டி மகா காளியம்மன், 48ம் ஆண்டு திருத்தேர் விழாவையொட்டி, இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஜெய்பீம் மகளிர் மன்றம் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில், பொய்யப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை, அரூர், அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் துவக்கி வைத்தார். இதில், பொதுமக்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த அளவு, மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோ-தனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.