உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி /  பாலினம் கண்டறிந்த வழக்கு மூன்று பேருக்கு குண்டாஸ்

 பாலினம் கண்டறிந்த வழக்கு மூன்று பேருக்கு குண்டாஸ்

தர்மபுரி: கருவின் பாலினம் கண்டறிந்து கூறிய வழக்கில், பெண் உட்பட இருவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில், தற்காலிக செவிலியர் பரிமளா என்பவரின் உதவியுடன், இடைத்தரகர் வடிவேல் உள்ளிட்டோர் மூலம், கர்ப்பிணியரின் கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து கூறப்பட்டது. இந்த வழக்கில், ஆந்திராவை சேர்ந்த கிளாரா மேனகா தேவி, 41, பிரதீப், 26, ஆகியோரை நவ., 17ல் பாலக்கோடு போலீசார் கைது செய்தனர்.‍ தற்காலிக செவிலியர் பரிமளா, வடிவேல் உள்ளிட்ட மூன்று பேர் தலைமறைவாகினர். இதுபோன்ற சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வரும், கிளாரா மேனகா தேவி மற்றும் பிரதீப் ஆகிய இருவர் மீதும், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் பரிந்துரை படி, மாவட்ட கலெக்டர் சதீஸ் உத்தரவிட்டார். இதையடுத்து, தர்மபுரி சிறையிலுள்ள, கிளாரா மேனகா தேவி, பிரதீப் ஆகியோரிடம், அதற்கான நகலை போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ