உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு டவுன் பஸ் சேவை துவக்கம்

அரசு டவுன் பஸ் சேவை துவக்கம்

ஓசூர், பேரிகை அருகே உள்ள எலுவப்பள்ளி கிராமம் வழியாக, அரசு பஸ் விட வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் கேட்டு வருகின்றனர்.நாடு சுதந்திரம் பெற்று இதுவரை பஸ் வசதி செய்யப்படவில்லை. கடந்த, 2021 சட்டசபை தேர்தலின் போது அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையின் படி, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் சட்ட சபையில் பேசினார். இதை தொடர்ந்து, பேரிகையில் இருந்து எலுவப்பள்ளி வழியாக திம்மசந்திரம் கிராமத்திற்கு, 31ம் நம்பர் அரசு பஸ் சேவை நேற்று முதல் துவங்கியது.அலங்கரிக்கப்பட்ட பஸ்சிற்கு திருஷ்டி கழித்து, மக்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். பஸ் சேவையை துவக்கி வைத்த எம்.எல்.ஏ., பிரகாஷ், கிராம மக்கள், மாணவ, மாணவியர் மற்றும் தொழிலாளர்களை பஸ்சில் ஏற்றி கொண்டு சிறிது தொலைவிற்கு ஓட்டி சென்றார். சூளகிரி ஒன்றிய தி.மு.க., செயலாளர் நாகேஷ், ஓசூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் லோகேஷ்ரெட்டி உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை