உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தர்மபுரி: அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில், பொதுத்தேர்-வெழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் வழிகாட்-டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.வரும், 2025 -- 2026ம் கல்வி ஆண்டில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள போக்குவரத்து கழக பணியாளர்-களின் குழந்தைகள் பொதுத்தேர்வை தன்னம்பிக்கையுடன் எதிர்-கொள்வதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி, தமிழ்நாடு அரசு போக்-குவரத்து கழகம், தர்மபுரி மண்டல அலுவலகத்தில், நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், 350 மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு தியான பயிற்சி முறையை 'இதய நிறைவு தியான பயிற்சியாளர்' குமரன் தன்னம்-பிக்கைக்கான சிறப்புரையை கணித ஆசிரியர் அறிவொளி மற்றும் முதுகலை விலங்கியல் ஆசிரியர் சரவணன் ஆகியோர் வழங்-கினர். தொடர்ந்து, மாணவ, மாணவியருக்கு எழுதுபொருள் உபக-ரணங்கள் மற்றும் பரிசு பொருளை நிர்வாக இயக்குனர் வழங்-கினார். இதில், பொது மேலாளர் செல்வம், துணை மேலா-ளர்கள், கிளை மேலாளர்கள், போக்குவரத்துக் கழக அலுவ-லர்கள், பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை