உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கேட்பாரற்று கிடந்த காரில் குட்கா பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த காரில் குட்கா பறிமுதல்

பாலக்கோடு, பாலக்கோடு அருகே, கல்கூடப்பட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் கர்நாடகா பதிவெண் கொண்ட மஹிந்திரா கார் ஒன்று, கேட்பாரற்று நின்றுள்ளதாக நேற்று முன்தினம் இரவு பாலக்கோடு போலீசுக்கு தகவல் வந்தது. அங்கு சென்ற போலீசார் காரை திறந்து பார்த்ததில், ஒரு மூட்டையில் இரண்டரை கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலிருந்து குட்காவை காரில் கடத்தி கொண்டு, கல்கூடப்பட்டி அருகே வந்தபோது, கார் பழுதானதால், வேறு வாகனத்தில் குட்கா மூட்டைகளை மாற்றி எடுத்து சென்றிருக்கலாம் என தெரிவித்தனர்.தொடர்ந்து, கார் மற்றும் அதிலிருந்த குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, குட்கா கடத்திய நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை