உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரியில் ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்படவில்லை

தர்மபுரியில் ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்படவில்லை

அரூர், ''தர்மபுரி மாவட்டத்தில், ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் உள்ளது,'' என, கொ.ம.தே.க., பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.தர்மபுரி மாவட்டம், அரூரில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. மாவட்டத்தில் ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் உள்ளிட்ட அனைத்து நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற கோரி, சில மாதங்களுக்கு முன் சட்டசபையில் பேசினேன். முதல்வரிடமும் அதை எடுத்து சென்றிருக்கிறோம். விரைவில் அத்திட்டங்களை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வோம். போலீஸ் ஸ்டேஷனில் சில நிகழ்வுகள் நடந்திருக்கக்கூடாது. அதை கண்டித்திருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ