உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஓசூர் அரசு ஐ.டி.ஐ.,ல் புதிய பயிற்சி பார்வை குறைபாடுள்ளோருக்கு அழைப்பு

ஓசூர் அரசு ஐ.டி.ஐ.,ல் புதிய பயிற்சி பார்வை குறைபாடுள்ளோருக்கு அழைப்பு

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்ப மற்றும் பயிற்சித்துறை சார்பில், ஓசூர் அரசு ஐ.டி.ஐ.,யில், தமிழக அரசு மூலம், பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்காக, புதிதாக துவங்கப்பட்டுள்ள கணினி ஆப்பரேட்டர் மற்றும் புரோகிராமிங் உதவியாளர் பயிற்சிக்கு சேர்க்கை நடக்க உள்ளது. மொத்தம், 12 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே, 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதியுள்ள, 14 வயது முதல், 40 வயது வரையுள்ள ஆண்கள் மற்றும் வயது வரம்பின்றி பெண்கள், தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் சென்று சேர்க்கை பெறலாம். பயிற்சி காலத்தில் மாத உதவித்தொகையாக, 750 ரூபாய், விலையில்லா பாடபுத்தகம், வரைபட கருவிகள், லேப்டாப், சீருடை, மிதிவண்டி, பஸ் பாஸ், ஷூ ஆகியவை வழங்கப்படும்.அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவியருக்கு புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. மாணவியர், ஓசூர் ஐ.டி.ஐ., வளாகத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல பெண்கள் விடுதியில் தங்கி பயிற்சி பெறலாம். மேலும் விபரங்களுக்கு, ஓசூர் அரசு ஐ.டி.ஐ.,க்கு நேரடியாகவோ அல்லது, 04344 262457, 63742 71245, 97879 70227 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டோ அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை