உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சரக குழு விளையாட்டு போட்டி இந்தியன் மெட்ரிக் பள்ளி சாதனை

சரக குழு விளையாட்டு போட்டி இந்தியன் மெட்ரிக் பள்ளி சாதனை

அரூர் :அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோட்டிலுள்ள இந்தியன் கல்வி நிறுவனங்களில் செயல்படும் இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவில் நடந்த குழு விளையாட்டு போட்டியில், 14 வயதுக்கு உட்பட்டோர் கேரம் இரட்டையர் பிரிவில், மாணவர்கள் மவுனிஷ், அக்சயசெல்வன் வெற்றி பெற்று, மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர். இறகுபந்து போட்டியில், 17 வயதுக்கு உட்பட்டோர் இரட்டையர் பிரிவில் மாணவர்கள் கனியமுதன், சுஜித் வெற்றி பெற்று, மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். சதுரங்க போட்டியில், 19 வயதுக்கு உட்பட்டோர் மகளிர் பிரிவில் தர்ஷினி, 11வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் போஷிகா, 19 வயதுக்கு உட்பட்டோர் ஆண்கள் பிரிவில் சதீஷ் ஆகியோர் வெற்றி பெற்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். எறிபந்து போட்டி மற்றும் கூடைப்பந்து போட்டியிலும் மாணவ, மாணவியர் வெற்றி பெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், அவர்களுக்கு பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பூவரசன், சவுந்தரவள்ளி, தாமரைச்செல்வன் ஆகியோரை இந்தியன் கல்வி நிறுவனங்களின் தலைவர் பழனிவேல், பொருளாளர் அருள்மணி, செயலாளர் தமிழ்முருகன், பள்ளி அகாடமி டைரக்டர் சுபாஷ், பப்ளிக் பள்ளி முதல்வர் பவித் ஆகியோர் வாழ்த்தி, பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை