மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
13 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
13 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
13 hour(s) ago
தர்மபுரி மார்க்கெட்டில் 25 டன் பூக்கள் விற்பனை
01-Oct-2025
தர்மபுரி : தர்மபுரி வட்டார வேளாண் இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளதாவது:விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பயிர் செய்யும் முன், வயல்களில் உள்ள மண்ணை பரிசோதித்து பயிர் சாகுபடி, உர பரிந்துரை மேற்கொள்ள வேளாண்துறை அறிவுறுத்தி வருகிறது. இதற்கு வேளாண் துறையில், 'தமிழ் மண் வளம்' என்ற இணையதளம் தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில், விவசாயிகளின் வயல்களில் ஏற்கனவே சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளின் ஆய்வு முடிவுப்படி, மண் வள அட்டைகள், அனைத்து சர்வே எண்களுக்கும் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் உழவன் செயலியில் உள்ள, 'தமிழ் மண் வளம்' இணைப்பில் சென்று, தங்கள் நிலம் இருக்கும் மாவட்டம், தாலுகா, சர்வே எண், விவசாயி பெயர், மொபைல் எண்ணை உள்ளீடு செய்து, தங்கள் நிலங்களுக்கு மண் வள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த அட்டையில் மண்ணின் கார அமிலத்தன்மை, உப்பின் நிலை, கரிம உரத்தின் நிலை, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, நுண்ணுாட்ட சத்துக்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், அந்த நிலத்தில் என்ன பயிர்கள் சாகுபடி செய்யலாம், அந்த பயிர்களுக்கு உர பரிந்துரை பற்றி தெரிந்து கொள்ளலாம். விவசாயிகள் அனைவரும் உழவன் செயலியில், தங்கள் நிலத்திற்கான மண்வள அட்டை பதிவிறக்கம் செய்து, அதற்கேற்ப பயிர் சாகுபடி செய்து உர மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
01-Oct-2025