உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கூட்டணியில் சேர்ந்ததால் அ.தி.மு.க.,விற்கு அழைப்பு; கிருஷ்ணகிரி காங்.,-எம்.பி.,பேட்டி

கூட்டணியில் சேர்ந்ததால் அ.தி.மு.க.,விற்கு அழைப்பு; கிருஷ்ணகிரி காங்.,-எம்.பி.,பேட்டி

ஓசூர், ''கூட்டணியில் சேர்ந்ததால், சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷன் நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,'' என, கிருஷ்ணகிரி காங்.,- எம்.பி., கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் பார்க்கிங் பணிகளை, நேற்று ஆய்வு செய்த கிருஷ்ணகிரி காங்., - எம்.பி., கோபிநாத், ஜனகபுரி லே அவுட், பசுமை நகர், கயிலை நகர், நந்தவனம், கோபிகிருஷ்ணா லே அவுட் பகுதிகளில் மக்கள் வழிப்பாதை இன்றி தவிப்பதால், சுரங்கப்பாதை அமைப்பதற்கான திட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.இதையடுத்து, எம்.பி., கோபிநாத் நிருபர்களிடம் கூறியதாவது:ஓசூர் - ஜோலார்பேட்டை ரயில்பாதை திட்டத்திற்கு சர்வே முடிவு சாதகமாக இல்லை. இதனால் ரயில்வே அதிகாரிகள், அமைச்சரிடம் பேசி, மீண்டும் ரீ சர்வே துவங்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் அறிக்கை கொடுப்பதாக கூறியுள்ளனர். சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷன் விழாவில், 'புரட்டோக்கால்' படி மேடைக்கு செல்ல முடியாது, பேச முடியாது என்று தெரிந்திருந்தும், வேண்டுமென்றே சிலர் அதிகாரிகளிடம் தவறாக பேசி சண்டையிட்டனர்.பிரதமரையே கொச்சைப்படுத்தும் வகையில், பா.ஜ.,வினர் நடந்துள்ளனர். அது மிகவும் வருந்தத்தக்க ஒன்று. பிரதமர் மோடிக்கு நாங்கள் தான் நல்லது செய்வது போல், பா.ஜ.,வினர் ேஷா காட்டி வருகின்றனர். பாரத பிரதமர் என்பவர் எல்லாருக்கும் பிரதமர் தான். 'பாரத் மாதா கி ஜே' என கோஷமிடுகின்றனர். துாங்குபவர்களை எழுப்பி விடலாம். துாங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. அரசு நிகழ்ச்சிக்கு, யார் பதவியில் இருக்கிறார்களோ அவர்களை தான் அழைப்பார்கள். கடந்த முறை சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் நடந்த நிகழ்ச்சிக்கு, எம்.பி., என்ற முறையில் நான் சென்றேன். அப்போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வத்திற்கு அழைப்பு இல்லை. ஆனால், இப்போது, பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்தவுடன், நேற்று (நேற்று முன்தினம்) நடந்த நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். தி.மு.க.,- எம்.எல்.ஏ.,வுக்கு அழைப்பு இல்லை. இவ்வாறு கூறினார்.மாவட்ட பொறுப்பாளர் நீலகண்டன், மாநில செயற்குழு உறுப்பினர் சூர்யகணேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சின்ன குட்டப்பா, கவுன்சிலர்கள் பாக்கியலட்சுமி, இந்திராணி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ