உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தி.மலை உழவர் பேரியக்க மாநாட்டில் திரளாக பங்கேற்க கட்சியினருக்கு அழைப்பு

தி.மலை உழவர் பேரியக்க மாநாட்டில் திரளாக பங்கேற்க கட்சியினருக்கு அழைப்பு

தி.மலை உழவர் பேரியக்க மாநாட்டில்திரளாக பங்கேற்க கட்சியினருக்கு அழைப்புதர்மபுரி, நவ. 29-தர்மபுரியில் உழவர் பேரியக்க ஆலோசனை கூட்டத்துக்கு, அதன் மாநில செயலாளர் வேலுசாமி தலைமை வகித்தார். பென்னாகரம் பா.ம.க.,- எம்.எல்.ஏ., ஜி.கே மணி பேசியதாவது:வரும், 21ல், திருவண்ணாமலையில் உழவர் பேரியக்க மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். மேலும் வரும், 2026 சட்டசபை தேர்தலில், பா.ம.க., பெரும்பான்மை வகிக்கும் நிலையில் மாநாடு நடத்த வேண்டும். அதன் முன்னோட்டமாக இந்த மாநாடு திருவண்ணாமலையில் நடக்கிறது. எனவே, அடுத்தடுத்த நாட்களிலிருந்தே, வரும் தேர்தலில் வெற்றியடைய கட்சியினர் மற்றும் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். நாம் நடத்தும் இந்த உழவர் பேரியக்க மாநாடு, ஆண்ட மற்றும் ஆண்டு கொண்டிருக்கும் கட்சியினர், புதியதாக கட்சி ஆரம்பித்துள்ளவர்களை ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பா.ம.க., முன்னாள் எம்.பி., பாரிமோகன், இளைஞரணி செயலாளர் முருகன், மாநில துணைத்தலைவர்கள் பாடிசெல்வம், சாந்தமூர்த்தி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஜெயலட்சுமி, கவிதா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை