உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சந்தையில் விலை போகாததால் பரிதாபம்கால்நடைகளுக்கு உணவாகும் கொத்தமல்லி

சந்தையில் விலை போகாததால் பரிதாபம்கால்நடைகளுக்கு உணவாகும் கொத்தமல்லி

சூளகிரி:சூளகிரியில், விலைக்கு கேட்க வியாபாரிகள் முன்வராததால், சாகுபடியான கொத்தமல்லி கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சூளகிரி, ஓசூர், தளி, கெலமங்கலம் பகுதிகளில், 5,700 ஏக்கருக்கு மேல் கொத்தமல்லி சாகுபடி நடக்கிறது. இதை மையமாக வைத்து, சூளகிரியில் கொத்தமல்லி சந்தை இயங்குகிறது. இங்கிருந்து விற்பனைக்கு, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கும் செல்கிறது. கடந்தாண்டு மே மாதம், ஒரு கட்டு கொத்தமல்லி, 90 ரூபாய், ஒரு கிலோ, 180 ரூபாய் வரை விற்றது. தற்போது கொத்தமல்லி சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதால், வரத்து அதிகரித்து விலை சரிந்துள்ளது. கடைகளில் ஒரு கட்டு கொத்தமல்லி அதிகபட்சமாக, 8 முதல், 10 ரூபாய்க்கு விற்கிறது. இதனால் மொத்தமாக கொத்தமல்லி வாங்கிய வியாபாரிகள் தற்போது வாங்காமல் தவிர்த்து வருகின்றனர். அதனால், சாகுபடியான கொத்தமல்லி தோட்டங்களில், மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டும், டிராக்டரை ஓட்டியும் விவசாயிகள் அழித்து வருகின்றனர்.இது குறித்து, சூளகிரி அருகே ஒமதேப்பள்ளியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், '45 நாட்களுக்குள் நிறைவான வருமானம் என நம்பி, கொத்தமல்லி சாகுபடி செய்தோம். ஆனால், அதை வாங்க வியாபாரிகள் முன்வரவில்லை. ஏக்கருக்கு, 35,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்தும் வருமானம் கிடைக்காமல் தவிக்கிறோம். பறிப்பு கூலி கூட கிடைக்கவில்லை. வேறு வழியின்றி கால்நடைகளுக்கு உணவாகவும், மாற்றுப்பயிர் பயிரிட டிராக்டரை ஓட்டி அழித்தும் வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை