உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காளியம்மன் கோவில் பல்லக்கு ஊர்வலம்

காளியம்மன் கோவில் பல்லக்கு ஊர்வலம்

தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், அதகப்பாடி காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த, 9-ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 10ல், புண்ணியாஜன பூஜை, தீ மிதித்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கரகம், செல்லியம்மன் பட்டாளம்மன் அழைப்பு, காளியம்மன் செல்லியம்மன், பட்டாளம்மன், ஊர்வலம் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று, காளியம்மன் பெரிய தேர் இழுத்தல் நிகழ்வு நடக்கவிருந்தது. மழையால் தேர் இழுத்தல் நிகழ்ச்சி ரத்தானது. தொடர்ந்து தேரில் பவனி வரும் அம்மன் உற்சவர் சுவாமியை, பக்தர்கள் பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, கோவிலை வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை