கணவாய் மாரியம்மன் பிடாரியம்மன் கோவில் விழா
கடத்துார் : கடத்துார், கணவாய் மாரியம்மன் பிடாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. தொடர்ந்து சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தன. கரக ஊர்வலத்துடன், பிடாரி அம்மன் கோவிலில் ஐஸ்வர்ய லட்சுமி, ராஜலட்சுமி அலங்காரத்தில் கணவாய் மாரியம்மன், பிடாரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வாணவேடிக்கையுடன் சென்றது. ஊர்வலம் மணியம்பாடி கணவாய் மாரியம்மன் கோவிலை அடைந்தது. பின் பக்தர்கள் பொங்கல் வைத்து, கிடா வெட்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.